50 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளிமான் பத்திரமாக மீட்பு! - deer rescued in thiruvannamalai
திருவண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள சின்னகோட்டாங்கள் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரது 50 அடி ஆழமுள்ள கிணற்றில், புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி மானை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.