தண்ணீர் தேடி வந்த புள்ளி மானுக்கு நடந்தது என்ன! - திருத்தணி காப்புக்காடு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காப்புக்காடு பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மான், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக, ரயில்வே காவல்துறையினர் அளித்தத் தகவலின்பேரில், புள்ளி மானின் உடலை மீட்ட வனத்துறையினர் காப்புக்காடு பகுதியில் அடக்கம் செய்தனர்.