வாக்குறுதியை கழுத்தில் அணிந்து சிபிஎம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - வாக்கு உறுதி பட்டியலை தனது கழுத்தில் அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்த CPM வேட்பாளர்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சித் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய நேற்று (பிப்ரவரி 4) இறுதி நாள் என்பதால், வால்பாறை 12 வார்டுக்கு திமுக கூட்டணி கட்சி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பரமசிவம், மக்களுக்குத் தேவையான வாக்குறுதிப் பட்டியலை தனது கழுத்தில் அணிந்துவந்து வேட்புமனு தாக்கல்செய்தார். இந்நிகழ்வு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.