தொடர் மழை எதிரொலி: 4 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய மணிமுத்தாறு அணை - Manimuttaru dam
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகள் அமைந்துள்ளன. இந்த அணைகள் வடகிழக்குப் பருவ மழையில் நிரம்புவது வழக்கம். இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதலே நல்ல மழை பெய்துவருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.