No 1 Chief Minister Stalin: 'நான் தான் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர்' - கோவையில் ஸ்டாலின் பெருமிதம் - கோவையில் ஸ்டாலின் பெருமிதம்
கோவை கொடிசியா அரங்கில் 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' என்ற பெயரில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை 6 மாதத்தில் சாதித்து இருப்பதாக தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர். 5 மாதங்களில் இது 3வது முதலீட்டாளர் மாநாடு. இதே வேகத்தில் போனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக விரைவில் உருவாகும். நான் பல நேரங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். பல மாநில முதலமைச்சர்களை ஒப்பிட்டு ஒரு கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் இன்றைக்கு நம்பர் 1 முதலமைச்சராக (No 1 Chief Minister Stalin) என் பெயரை அறிவித்திருக்கிறார்கள். இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, எங்களுடைய அமைச்சரவைக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, இந்த அரசுக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாகத்தான் கருதுகிறேன். என் பெயரைச் சொல்லி நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்வதைவிட, நம்பர் 1 தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலையை உருவாக்குவதுதான் என்னுடைய இலட்சியம்" என தெரிவித்தார்.
Last Updated : Nov 23, 2021, 6:58 PM IST