குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி!
நாமக்கல்: பெண்களுக்கான சைல்டு லைன் இந்தியா பவுண்டேஷன், கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பரமத்தி வேலூர் பேருந்து நிலையம் முன்பு குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், பாலியல் பாதிப்பு, துன்புறுத்தல், ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு தேவைகள் குறித்து மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.