வீடியோ: அம்பத்தூரில் கனமழை காரணமாக வீடுகளில் சூழ்ந்த வெள்ளம்! - வெள்ள நிவாரணம்
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் விட்டுவிட்டு பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக அம்பத்தூர் அடுத்துள்ள பாடி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளைச் சுற்றி மழை நீரானது சூழ்ந்துள்ளது. மேலும், தாழ்வானபகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.