குதிரையில் வந்து படுக தேச பார்ட்டி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்! - வேட்புமனு தாக்கல்
சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. உதகை தொகுதியில் படுகு தேச பார்ட்டி சார்பில் போட்டியிடும் மஞ்சை மோகன் என்ற வேட்பாளர், குதிரையில் சென்று வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், படுகர் மொழியில் உற்சாகமாக சத்தமிட்டபடி வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் அழைத்து வந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மோனிகா ரானாவிடம் மஞ்சை மோகன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.