நீச்சல்: உலக சாதனை படைத்த சகோதரர்கள் - world record by swimming
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மற்றும் ராமநாதன் சகோதரர்கள், நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக, நேற்று (நவ.10) தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள நீச்சல் குளத்தில், இரண்டு மணி நேரம் கையையும் காலையும் கட்டிக்கொண்டும், பின்னர் 10 மணி நேரம் சாதாரணமாகவும் நீச்சல் அடித்தனர். இதில் 12 மணி நேரத்தில் 21 கிலோமீட்டர் 250 மீட்டர் வரை நீச்சல் செய்து உலக சாதனை படைத்தனர். உலக சாதனை படைத்த இரு சகோதரர்களின் சாதனைகளை அங்கீகரித்து குளோபல் உலகசாதனை புத்தகம் சார்பில் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.