ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் - 2 நாள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டெடுத்த மீட்புக் குழுவினர் - ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் - 2 நாள் போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்டெடுத்த மீட்புக் குழுவினர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 10 ஆம் வகுப்பு படிக்கும் சந்தோஷ் என்ற மாணவர் நண்பர்களுடன் ஓடைக்குக் குளிக்கச் சென்ற போது எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து மாணவனை மீட்கும் பணியில் இரண்டு நாள்களாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டுவந்த நிலையில், மாணவனின் உடல் நேற்று (நவ.10) மீட்கப்பட்டது. இதையடுத்து மாணவனின் உடல் உடற்கூராய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.