தமிழ்நாட்டில் பாரத மாதாவுக்கு கோயில்! - 7,000 சதுர அடி பரப்பளவில் பாரத மாதா கோயில்!
நாமக்கல்: பெரியூர் பகுதியில் பாரத அன்னை சேவா அறக்கட்டளை இயக்கத்தினர் கட்டியுள்ள பாரதா மாதா கோயிலின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சுமார் 7,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் ஐந்து அடி அகலத்தில் பீடம் அமைத்து அதில் 10 அடி உயரத்திற்கு பாரத மாதா சிலையை எழுப்பியுள்ளனர். சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் பாரத மாதா சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாரத மாதாவை வணங்கினர்.
Last Updated : Sep 12, 2019, 1:33 PM IST