HelicopterCrash நேரடியாக விபத்தை பார்த்தவர்கள் பேட்டி - coonoor chopper crash today
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் நோக்கி இன்று (டிசம்பர் 8) விமானப்படைக்கு சொந்தமான மிக்-17வி5 ரக ஹெலிகாப்டர் சென்றுகொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ உயர் அலுவலர்கள் உள்பட 14 பேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள காட்டேரி மலைப்பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை நேரடியாக பார்த்த பொதுமக்களின் கருத்துக்களை பார்க்கலாம்.