அதிராம்பட்டினம் கடற்பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல்! - அதிராம்பட்டினம் கடற்பகுதியில் திடீரென உள்வாங்கிய கடல்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசி வந்தது. நேற்று(மே.18) காற்றின் வேகம் குறைந்ததால் ஏரிப்புறக்கரை கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகினர். அப்போது கடல் 200 மீட்டர் தூரம் உள்வாங்கியிருந்தது. தண்ணீர் இன்றி ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் தரைத் தட்டியிருந்தது. இதைக் கண்ட அதிர்ச்சியடைந்த மீன்வர்கள் கடலுக்குச் செல்லாமல் வீடு திரும்பினர்.