ஓட்டேரி பாலம் அருகே ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி - ஓட்டேரி
ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டேரி நல்லா கால்வாயில் நீர் அதிகமாகச் செல்வதைப் பார்க்கச் சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட சுதாகர் என்ற இளைஞர் அவரை காப்பாற்றக் கால்வாயில் குதித்துள்ளார். கால்வாயில் அதிகமான தண்ணீர் சென்றதால் தண்ணீரில் சுதாகர் அடித்துச் செல்லப்பட்டார். இது குறித்துத் தகவலறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டு கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சுதாகரை பத்திரமாக மீட்டனர். பின்னர் வலிப்பு ஏற்பட்டு கால்வாயில் விழுந்த எழுமலையை தேடி வருகின்றனர்.