சுதந்திர தினவிழா: பார்வையாளர்களைக் கவர்ந்த நடன நிகழ்ச்சி! - மாணவ, மாணவி
வேலூரில் 73ஆவது சுதந்திர தின விழா நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகள் சார்பில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் நடனமாடிய மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கோப்பைகள் வழங்கினார்.