புத்தகம் ஏந்திய கையில் மது விற்கும் சிறுவன்: அதிர்ச்சி காணொலி!
திண்டுக்கல்: குஜிலியம்பாறை பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கம்பெனி எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் சுமார் 9 வயது சிறுவன் மதுபாட்டில்களின் பெயரை சொல்லி, மது விற்பனை செய்து வருகிறான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், புத்தகங்களைப் புரட்ட வேண்டிய கைகள், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ளது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.