ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: கடும் பயிற்சியில் உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லே! - மெல்போர்ன்
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்க உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவிற்கு படையெடுத்துள்ளனர். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, தனது சொந்த ஊரில் நடைபெறும் தொடருக்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.