டக்கார் ரேலி : பாலைவனத்தில் சீறிப்பாயும் போட்டியாளர்கள்! - சவுதி அரேபியா
சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா பாலைவனத்தில் கரடு முரடான பாதைகளுடன் கூடிய பாலைவன மணற்பரப்பில், கடுமையான தட்பவெப்ப நிலைகளில் ‘டக்கார் ரேலி’ என்ற கார் மற்றும் பைக் பந்தயம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான போட்டிகள் இன்று முதல் (ஜன.03) அடுத்த ஜனவரி 15ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான முதல் சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கின. இதில் கரடுமுரடான பாதைகளில் போட்டியாளர்கள் கார் மற்றும் பைக்குகளில் சீறி பாய்ந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.