43 ஆயிரம் டாலர்களை ஆஸ்திரேலியக் காட்டுத் தீ நிவாரணத்திற்கு அளித்த செரீனா! - 43 ஆயிரம் டாலர்கள் வழங்கிய செரீனா
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். பேறு காலத்திற்கு பின் டென்னிஸுக்கு திரும்பிய செரீனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி இது. இந்த தொடரில் வெற்றிபெற்றதால் கிடைத்த 43 ஆயிரம் டாலர்களை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கியுள்ளார்.