உலகக்கோப்பையோடு கோலியை செதுக்கிய மணற்சிற்ப கலைஞர்! - INDvNZ
ஒடிசா: உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதையொட்டி இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், புரி கடற்கரையில் உள்ள மணலில் உலகக்கோப்பையோடு சேர்த்து கேப்டன் விராட் கோலியின் முகத்தை வடிவமைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.