மத்திய அமைச்சருடன் கிரிக்கெட் விளையாடிய பாண்டியா!
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, நாக்பூரில் நேற்று நடைபெற்ற ’காஸ்தர் கிருதா மஹோத்ஸவ்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் அந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சி மேடையிலேயே கிரிக்கெட் விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வரும் பாண்டியா, மத்திய அமைச்சருடன் கிரிக்கெட் விளையாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.