பளு தூக்குதலில் தன் சாதனையைத் தானே முறியடித்த மீராபாய் சானு! - மீராபாய் சானு சாதனை
கொல்கத்தாவில் நடந்த தேசிய பளுதூக்குதல் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் 203 கிலோவை தூக்கி தங்கப்பதக்கத்தை மீராபாய் சானு கைப்பற்றினார். இதற்கு முன்னதாக தாய்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின்போது 201 கிலோ தூக்கிய தனது சாதனையை, தற்போது 203 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு முறியடித்துள்ளார்.