பார்முலா ஒன்: தொடர்ந்து மிரட்டும் லீவிஸ் ஹேமில்டன்! - மெர்சிடிஸ் அணி
லண்டன்: ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று (ஆக்ஸ்ட் 16) பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன் முதலிடத்தை பெற்றார். ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இரண்டாவது இடத்தையும், மெர்சிடிஸ் அணியின் வால்டேரி போடாஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். இதன் மூலம் தற்போது வரை ஆறு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் நான்கில் முதலிடத்தை பெற்று மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன் 128 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.