மூன்று டயர்களுடன் வெற்றிக்கான கோட்டினைக் கடந்த ஹேமில்டன், கடைசி நிமிடத்தில் பரபரப்பு! - லீவிஸ் ஹேமில்டன்
லண்டன்: பிரிட்டனிலுள்ள சில்வர்ஸ்டோன் டிராக்கில் நேற்று(ஆகஸ்ட் 2) பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற்றது. இதில், முதல் இரு இடங்களில் சென்று கொண்டிருந்த மெர்சிடிஸ் அணியின் லீவிஸ் ஹேமில்டன், வால்டேரி போடாஸ் ஆகியோரது கார்களில் கடைசி நேரத்தில் பஞ்சர் ஏற்பட்டது. இருப்பினும், ஹேமில்டன் சமயோஜிதமாக காரை இயக்கியதால் மூன்று டயர்களுடன் வெற்றிக்கான கோட்டினைக் கடந்தார். ஆனால், போடாஸ் 11ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் இரண்டாவது இடத்தையும், ஃபெராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
Last Updated : Aug 3, 2020, 4:42 PM IST