மலையாளத்தில் புதைந்துள்ள ‘தமிழ்’ வார்த்தைகள்... - இயக்குநர் ராம் சொல்வது என்ன? - Mamangam press meet
பத்மகுமார் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடித்துள்ள வராலாற்றுத் திரைப்படம் 'மாமாங்கம்'. இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இதில் தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் ராம் வசனம் எழுதியுள்ளார். இதனிடையே நேற்று நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராம், தமிழில் பயன்படுத்தாமல் உள்ள பல சொற்களை மலையாளத்தில் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.