'மாமாங்கம்' பத்திரிக்கையாளர் சந்திப்பு
பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து உருவாகிவரும் வராலாற்றுத் திரைப்படம் 'மாமாங்கம்'. இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை காவ்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கேரளாவில் பிரபலமான களரி கலை, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மாமாங்க திருவிழா ஆகியவற்றை எடுத்துரைக்கும் இந்த வரலாற்று திரைப்படத்தில் மம்முட்டி மாறுபட்ட கேரக்டரில் தோன்றவுள்ளார். மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. டிசம்பர் 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது.