ட்விட்டரில் இருக்கிறேனா?- என்ன சொல்லுகிறார் செந்தில்!
நகைச்சுவை நடிகர் செந்தில் பெயரில் நேற்று ஒரு போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. அதுபோலி என்று தெரியாமல் பலரும் அந்த கணக்கை பின்தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் தன்னிடம் ட்விட்டர் கணக்கு இல்லை என்றும், அது ஒரு போலி கணக்கு என்று செந்தில் வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.