புனித்திற்குப் பதிலாக என் உயிரை எடுத்திருக்கலாம் - சரத்குமார் உருக்கம் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு (puneeth Rajkumar), கர்நாடக திரைப்பட வர்த்தக சபை சார்பில் நேற்று (நவம்பர் 16) நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சரத்குமார் (Sarath kumar), "புனித் என் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருவார் என நினைத்தேன். இறைவன் புனித்துக்குப் பதிலாக என்னை எடுத்துக்கொண்டிருக்கலாம். என் வாழ்க்கையை அவருக்குக் கொடுப்பேன். எனது முழு வாழ்க்கையையும் அவரது குடும்பத்துக்கு அளிக்க நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.