புனித் ராஜ்குமார் என்றும் நம் மனதில் நிலைத்திருப்பார் - நடிகர் பிரபு - புனித் ராஜ்குமார் மறைவு
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது," புனித் ராஜ்குமார் மிகவும் நெருங்கிய நண்பர். நாங்கள் இருவரும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள். அவரது மறைவை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. நான் பெங்களூரு வரும் போது புனித் ராஜ்குமார் வீட்டிற்கு சென்று உணவருந்துவேன். அவர் நம் மனதில் என்றும் நிலைத்திருப்பார்" என்றார்.