நடிகர் கொட்டாச்சி இயக்கிய குறும்படம் என் கண்களை ஈரமாக்கி விட்டது - பார்த்திபன் - குறும்படம்
தமிழ் படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் நடித்தவர் கொட்டாச்சி. இந்த கரோனா காலத்தில் கொட்டாச்சி இயக்கி, நடித்த "வறண்ட விழிகள்" குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் சீனுராமசாமி, விஜய் சேதுபதி ஆகியோர் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது நடிகர் பார்த்திபன் இந்த படத்தை பார்த்து கண்ணீர் வடித்ததாக ஆடியோ மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.