"தமிழ்நாட்டில் போதைப் பொருள் இருப்பது வருத்தமளிக்கிறது'' - அருண்விஜய் - மாஃபியா
நடிகர் அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மாஃபியா. ப்ரியா பவானி ஷங்கர், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஆக்க்ஷன், த்ரில்லர் பாணியில் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் வெற்றி குறித்து அருண் விஜய் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.