திருப்பத்தூர் நகர காங்கிரஸ் தலைவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தர்ணா! - திருப்பத்தூர் மாவட்டம்
Published : Dec 10, 2023, 5:59 PM IST
திருப்பத்தூர்: இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நல திட்ட உதவிகள் கொடுக்க இருந்தபோது நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை தலைவர் பூட்டி சென்றதால் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அடுத்த லண்டன் மெஷின் ரோட்டில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியினர் பல்வேறு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் சோனியா காந்தியின் 77ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் பார்த்திபன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் சையத் தஸ்தகீர் ஆகியோர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலக தலைவர் ஜெகநாதன் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்காமல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் கமிட்டியினர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.