போதையில் பாட்டியிடம் வம்பு - இளைஞர்கள் தர்ம அடி வாங்கிய வீடியோ வைரல்! - திருவண்ணாமலை
கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று இரவு வயதான பாட்டி ஒருவர் இளைஞர்கள் சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த இளைஞர்களை மடக்கி பிடித்ததுடன் இதுகுறித்து பாட்டியிடம் விசாரித்த போது, தான் கன்னியாகுமரியில் உள்ள ஒரு உணகவத்தில் தூய்மை பணியாள்ராக பணியாற்றி வருவதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் போது இந்த இளைஞர்கள் தன்னை பாலியல் ரீதியாக சீண்டல்கள் செய்ய முற்பட்டதாகவும், இதனால் தான் கூச்சலிடவே அவர்கள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த இளைஞர்களிடம் பொதுமக்கள் விசாரித்த போது, அவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. மது போதையில் இருந்த அந்த மாணவர்கள் நள்ளிரவில் தனியாக நடந்து வருவது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்து, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
மொத்த 4 இளைஞர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே, அவர்கள் நான்கு பேரை பாதிக்கப்பட்ட பாட்டியும் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்மணியும் தர்ம அடி கொடுத்து நன்கு கவனித்தனர். தகவலறிந்து வந்த கன்னியாகுமரி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். பாட்டியிடம் தொந்தரவு செய்த இளைஞர்கள் தர்ம அடி வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.