நண்பனின் நினைவு நாளில் ரத்த தானம் செய்த நண்பர்கள்...ராணிப்பேட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்! - memorial day
Published : Jan 7, 2024, 10:56 PM IST
ராணிப்பேட்டை:சோளிங்கர் அடுத்த மெத்த வாடி கிராமத்தைச் சார்ந்தவர் ரமணா ( எ) போஸ். இவர் சோளிங்கர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் வாரம் பணியை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் பொழுது சாலையில் பன்றி மேல் இவரது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருக்கு இன்று 16ம் நாள் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்ட நிலையில் அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று திரண்டு வாலாஜா அரசு மருத்துவமனை உதவியுடன் ரத்த தானம் செய்தனர். இதில் இளைஞர்களும் பெண்களும் 70க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
மேலும் நண்பனின் நினைவு நாளை வாழ்க்கை முழுவதும் நினைவுச் சின்னமாக இருக்க வேண்டும் என்று தங்கள் கிராமத்திற்குச் செல்லும் சாலை முழுவதும் மரக்கன்றுகள் நட்டு நண்பனின் நினைவு நாளை அனுசரித்தனர். மேலும் கூட்டுப் பிரார்த்தனை செய்து நண்பனின் நினைவு நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த அனைத்து இளைஞர்களுக்கும் வாலாஜா மாவட்ட மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழ்களை மருத்துவர் ரேவதி வழங்கினார்.