மூதாட்டியின் நகை பறிப்பு; தப்பி ஓடும்போது விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட இளைஞர்கள் - latest tamil news
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்து சென்ற வழக்கறிஞர் சுந்தரம் என்பவரது மனைவி சுலோச்சனா (71) எனும் மூதாட்டியிடம் இளைஞர்கள் இரண்டு பேர் 12 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். தப்பிச்செல்லும்போது சாலை விபத்தில் சிக்கி கீழே விழுந்து, மீண்டும் தப்பி ஓடிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இளைஞர்கள் விபத்தில் சிக்கி, தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST