தமிழ்நாடு

tamil nadu

Etv Bharat

ETV Bharat / videos

Baba Ramdev Video : அட இவருங்க! - 30 ஆண்டுகள் முந்தைய வீடியோ வெளியிட்ட பாபா ராம்தேவ்! - யோகா குரு பாபா ராம்தேவ் வீடியோ

By

Published : Apr 2, 2023, 7:35 AM IST

ஹரித்வார் : 30 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட தன் வீடியோவை யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டு உள்ளார். பதஞ்சலி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ். பன்முகத் தன்மை கொண்ட பாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை வெளியிட்டு மாட்டிக் கொள்வது வழக்கம். 

இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன் தன ஓய்வு உபசார விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பாபா ராம்தேவ் வெளியிட்டு உள்ளார். பதாஞ்சி யோக்பீத் கூடத்தில் துறவிகளுக்கு பயிற்சி பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்ததாகவும், தன் ஓய்வு பெற்ற நாளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக பாபா ராம்தேவ் தெரிவித்து உள்ளார். 

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன் கடந்த 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ராம நவமி பண்டிகை அன்று இந்த சன்னியாச விழா நடைபெற்றதாக தெரிவித்து உள்ளார். அந்த வீடியோ யோகா குரு பாபா ராம்தேவ், அச்சர்ய பாலகிருஷ்ணா, உள்ளிட்டோர் உள்ளனர். ஏறத்தாழ 17 நிமிடங்கள் கொண்ட வீடியோவை வெளியிட்ட பாபா ராம்தேவ், அந்த காலக்கட்டத்தில் தான் சந்தித்த நெருக்கடி மற்றும் பிரச்சினைகள் குறித்து தெரிவித்து உள்ளார். 

வீடியோவில் யோகா குரு பாபா ராம்தேவ், பல்வேறு யோகா ஆசனங்களை செய்து காண்பிக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details