தமிழ்நாடு

tamil nadu

woman tried to set fire

ETV Bharat / videos

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்.. வீடு கட்டித் தருவதாகக் கூறி வக்கீல் மோசடி செய்ததாகப் புகார்! - Woman tried to set fire

By

Published : Aug 7, 2023, 8:52 PM IST

கோயம்புத்தூர்: ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்தவர், இந்திராணி. இவர் சூலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு இடம் வாங்கி உள்ளார். அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாகக் கூறி ஏமாற்றியதாக இன்ஜினியர் சித்திரைநாதன் என்பவருக்கும் இந்திராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

மேலும் இதற்குத் தீர்வு காணத் தமிழரசன் என்ற வழக்கறிஞரை இந்திராணி நாடிய நிலையில் தமிழரசன் தீர்வு கண்டு தருவதாகக் கூறியுள்ளார். இதனை அடுத்து, சித்திரைநாதனுக்கு ரூபாய் 3 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று பணத்தை, இந்திராணியிடம் தமிழரசன் பெற்றுள்ளார்.

ஆனால், தமிழரசன் பணத்தை சித்திரைநாதனிடம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் வழக்கறிஞர் தமிழரசன் தான் பொறியியல் படிப்பு படித்து உள்ளதாகவும்; அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாகக் கூறி ரூபாய் 8 லட்சத்து 70,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு கட்டடத்தின் பேஸ் மட்டத்தை மட்டும் கட்டிவிட்டு நீங்கள் கொடுத்த பணத்திற்கு இவ்வளவு தான் கட்ட முடியும் என்றும் கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதுகுறித்து இந்திராணி கேட்டதற்குக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார் கூறியதாகவும், அதன் மீது விசாரணை நடத்திய தலைவர் மீதித் தொகையைத் திருப்பி வாங்கி தருவதாகக் கூறினார்.

ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார், இந்திராணி. இந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: வாழ்க்கை மிகவும் அழகானது, அனைவரிடமும் அன்பைப் பரப்புங்கள். எந்தவொரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது சரியான தீர்வாகாது. சொந்தக் காரணங்களோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால், மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் 104 அல்லது 044-24640050 என்ற சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணை அழையுங்கள்.

ABOUT THE AUTHOR

...view details