Elephant video: குட்டிகளுடன் சாலையை கடக்கும் காட்டு யானை - வைரலாகும் க்யூட் வீடியோ! - பந்தலூர்
Published : Aug 26, 2023, 6:37 PM IST
நீலகிரி:கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி - நம்பியார் குன்று செல்லும் பிரதான சாலையில் தேயிலை தோட்டத்திலிருந்து இரண்டு குட்டிகளுடன் வந்த தாய் காட்டு யானை சாலை கடந்து மறுபக்கம் சென்றது.
அச்சமயம் சாலையில் வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்ததால் தன்னுடைய சிறு குட்டியை பாதுகாப்பாக தனது கால்களுக்கு நடுவில் பாதுகாப்பாக கூட்டிச்சென்று சாலை கடந்து சென்று, தடுப்பு வேலியை தாண்டும் பொழுது குட்டியை தனது தும்பிக்கையால் தூக்கி விட்டு தானும் சென்ற காட்சி மனிதர்களை மிஞ்சி விட்டதாக தெரிகிறது.
சாலைகளைக் கடக்கும் போது நாம் எப்படி நம்முடைய குழந்தைகளை அரவணைத்து கூட்டி செல்வோமோ, அதேபோல் தன் குட்டிகளை அரவணைத்து வழிநடத்தும் பாசக்கார தாய், யானையின் வீடியோவை அப்பகுதியில் இருந்த மக்கள் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சமீபகாலமாக குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து அட்டூழியம் செய்யும் செய்திகள் வரும் நிலையில், தற்போது தன் குட்டிகளுடன் சாலையை கடக்கும் தாய் யானையின் வீடியோ மக்களை நெகிழ்வடைய செய்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.