தமிழ்நாடு

tamil nadu

தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக கலெக்டரிடம் மனு அளித்த மனைவி!!

ETV Bharat / videos

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவர் பலி.. இறப்பில் சந்தேகமென மனைவி கண்ணீர் மல்க கோரிக்கை.. - தூத்துக்குடி மாவட்ட செய்தி

By

Published : Mar 13, 2023, 9:42 PM IST

தூத்துக்குடி: வெளிநாட்டில் ஹோட்டல் வேலைக்கு சென்ற கணவர் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து உடலை மீட்டு ஒப்படைக்க கோரியும் தூத்துக்குடி ஆட்சியரிடம் குடும்பத்துடன் கண்ணீர் மல்க மனைவி புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா ஆத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் அய்யாதுரை (47). 

இவரது மனைவி சொர்ணம். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி மூலமாக கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி கிராம பகுதியில் உள்ள ஒருவர் மலேசியா நாட்டில் கோலாலம்பூர் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருபவரிடம் அய்யாதுரையை வேலைக்கு சேர்ந்துள்ளார். 

அதன்படி அவரும் அங்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் தனது மனைவி சொர்ணத்திடம் வீடியோ கால் மூலம் பேசிய அய்யாத்துரை இன்று சம்பளம் வாங்கி விடுவேன், வாங்கியவுடன் அனுப்பி விடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திடீரென இரவு ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளரும் அவரது மனைவியும் அய்யாதுரை மனைவி சொர்ணத்தை செல்போன் மூலம் அழைத்து உனது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆகவே, அவரது உடலை நாங்கள் பத்திரமாக அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.  

இதனால் அதிர்ச்சியடைந்த சொர்ணம், தனது கணவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனநிலை சரியில்லாத நபர் அல்ல. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஊனமுற்ற மகள் உள்ளிட்ட 3 மகள்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். அதில் எனது கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும், அவரது மரணம் குறித்து விசாரணை நடத்துமாறும் கோரிக்கை வைத்துள்ளார். 

இதையும் படிங்க: தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கில் எஞ்சிய குற்றவாளிகள் விரைவில் கைது - டிஐஜி பிரவேஷ் அதிரடி

ABOUT THE AUTHOR

...view details