சிவகாசியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி!
சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 56ஆவது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை, மீன் வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்தப் போட்டியில் 360 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், ஒவ்வொரு சுற்றிலும் 40 காளைகளும் 25 வீரர்களும் களத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தினை காண, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால், 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST