பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்
திருவள்ளூர்: மாண்டஸ் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக நிரம்பியுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கபட்டு உள்ளதால் கொசஸ்த்தலை ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST