குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை! - குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி:குற்றால அருவிகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவி நீரின் சீற்றம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பைக் கருதி மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குவது குற்றாலம். இந்த குற்றலாத்தில் இந்த ஆண்டு சீசன் முறையாக தொடங்கவில்லை. இரவு நேரங்களில் தென்காசி, குற்றாலம் ஆகியப் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படாவிட்டாலும் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால், அருவில் கொட்டும் தண்ணீரில் மண் கலந்து கலங்கிய நிலையில் வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி அருவிகளில் பொதுமக்கள் குளிக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதையும் படிங்க:Tenkasi News - தமிழ்நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலரைக் காண ஆர்வமுடன் வரும் மலையாளிகள்