Video: ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தலைகீழாக நின்று விநோதப் போராட்டம்! - தலைகீழாக நின்று மனு கொடுக்கும் போராட்டம்
திருவள்ளூர்: பெத்திக்குப்பம் ஊராட்சியில் மாதம்தோறும் முறையாக ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதில்லை எனவும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாகவும், மாதாந்திரக் கூட்டம் நடத்தாமலேயே நடைபெற்றதாக கையெழுத்து வாங்கப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டிக்கும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் லோகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயிலில் தலைகீழாக நின்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST