Surprise Gift: Video: கணவருக்கு மறக்க முடியாத பிறந்த நாள் சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி! - Celebrating her husband s birthday
புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற பெண்மணி தங்களது வீட்டில் பெண்கள் அழகு சாதனை நிலையம் வைத்து பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். புதுக்கோட்டை அருகே தனது கணவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அதனைக் கொண்டாடும் விதத்தில் கணவரின் புகைப்படத்தை பிரியா கோலப்பொடியால் தனது வீட்டில் வரைந்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தன் கணவனின் உருவத்தை பிரியா கோலத்தில் வரைந்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.