viral video: குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்! - leo
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் வாரிசு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் தற்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை - பல்லாவரத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்று நடிகர் விஜயை பார்க்க வேண்டும் எனக்கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
அந்த வீடியோவில் “விஜய் அங்கிள் என்னை பார்க்க வரமாட்டீங்களா” என அடம் பிடிக்கிறது. இந்த வீடியோ நடிகர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அந்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் வீடியோ கால் மூலம் குழந்தையுடன் நடிகர் விஜய் உரையாடினார். பின்னர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் நடிகர் விஜய் நலம் விசாரித்தார்.
நடிகர் விஜய்யுடன் வீடியோ காலில் உரையாடியதை அடுத்து அந்த குழந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. நடிகர் விஜய்யுடன் குழந்தை உரையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Ponniyin Selvan 2: இசை வெளியீட்டு விழாவில் ஷாக் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கூறியது என்ன?