தமிழ்நாடு

tamil nadu

பள்ளியில் பழங்கால கார் அணிவகுப்பு

ETV Bharat / videos

INDEPENDENCE DAY 2023: சுதந்திர தின விழாவை முன்னிட்டு தனியார் பள்ளியில் பழங்கால கார் அணிவகுப்பு!

By

Published : Aug 15, 2023, 7:04 PM IST

நீலகிரி:77வது சுதந்திர தின விழாவில் குன்னூர் தனியார் பள்ளியில் பழங்கால கார்கள் அணிவகுப்பு நடைபெற்றது. குன்னூரில் உள்ள சென் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், விமானப்படை குழு தலைவர் எம்.கே.இலாப்ரூ தலைமையில் இந்திய தேசிய கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விமானப்படை குழு தலைவருக்கு பள்ளி மாணவர்கள் சார்பாக, பேண்ட் வாத்தியம் முழங்க அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பழமை வாய்ந்த 20 வாகனங்களின் அணிவகுப்பு முதன் முதலாக தனியார் பள்ளியான செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் மிகவும் பழமை வாய்ந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன. 

பின்பு வாகன உரிமையாளர்களுக்கு விமானப்படை குழு தலைவர் பரிசுகளை வழங்கினார். பின்பு மாணவர்களிடையே அவர் எழுச்சிப்பூர்வமாக உரையாற்றினார். மேலும் மாணவியர்களின் பாடல் போட்டிகள், பரதநாட்டிய போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஜேக்கப் ஜோசப் மற்றும் தலைமை ஆசிரியர் பாஸ்கர் மற்றும் பெடரேஷன் இல்ல தலைவர் டேமியன் வர்கீஸ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவ மாணவியர்கள் என பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ABOUT THE AUTHOR

...view details