தமிழ்நாடு

tamil nadu

சாலை வசதி வேண்டி சேற்றில் நாத்து நடவு செய்து பொதுமக்கள் நூதன முறையில் போராட்டம்

ETV Bharat / videos

சாலை வசதி வேண்டி சேற்றில் நாற்று நட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்! - பேரணாம்பட்டு மக்கள் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 6:30 PM IST

வேலூர்: பேரணாம்பட்டு அடுத்த ஏரிக்குத்தி கிராமத்தில் திருவள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் சாலை வசதி அமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை மனு கொடுத்து புகார் அளித்து உள்ளனர். அந்த புகார் மனு மீது அதிகாரிகள் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்திலும், பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சாலையில் மழை நீரானது தேங்கி நிற்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து சாலை அமைத்துத் தரக்கோரி, சாலையில் தேங்கி நிற்கும் சேற்றில் நாற்று நடவு செய்து, நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இதன் மூலம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விரைந்து சாலை அமைத்துத் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details