தமிழ்நாடு

tamil nadu

சென்னை

ETV Bharat / videos

விஜயகாந்த் குரலில் பிரேமலதாவிற்கு குறி சொன்ன சாமியார்.. என்ன கூறினார் தெரியுமா? - தேமுதிக அலுவலகம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 7:55 PM IST

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரின் இந்த மறைவு திரையுலகினர் மட்டுமின்றி, அனைத்து தமிழ் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து, அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேடு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த்தின் நினைவிடத்திற்கு வந்தவர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், பிரேமலதாவிற்கு குறி சொல்லி, அவருக்கு சிறிய சிவலிங்கத்தை பரிசாக வழங்கினார். அதுமட்டுமின்றி "விஜயகாந்த் உங்களை விட்டு எங்கும் போகவில்லை. அவர் உங்களின் மூத்த மகன் உருவில், உங்களுடன்தான் இருக்கிறார்" என்றார். 

திடீரென விஜயகாந்த் குரலில், "என்னை பத்து தெரியும்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுவிட்டு எங்க போகப்போறேன். என் புள்ளைகளை விட்டுட்டு எங்க போகப் போறேன். உன் கூடவேதான் இருக்கிறேன்.. மக்களுக்கு முடிந்த அளவு அன்னதானம் செய்து ஏழை மக்களுக்கு இயன்றதை செய்யவோம்" என்று பேசினார். இதனை கேட்ட பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details