ThumbsUp காட்டிய விஜயகாந்தால் உற்சாகமடைந்த தொண்டர்கள்
சென்னையில் நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியேற்ற வந்தார். நீண்ட நாட்களாக உடல்நிலை காரணமாக வெளியே வராமல் இருந்த விஜயகாந்த் இன்று கொடியேற்ற நிகழ்விற்காக தொண்டர்களை சந்தித்து இரண்டு கைகளிலும் Thumbs Up காட்டினார். இதைக்கண்ட தொண்டர்கள், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். சிலர் விஜயகாந்தின் உடல்நிலையினை நினைத்து கண்ணீர் மல்கினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST