தமிழ்நாடு

tamil nadu

காட்டுக்குள் இளம்பெண்ணுடன் காவலர் செய்த வேலை

ETV Bharat / videos

Viral - காட்டுக்குள் பெண்ணுடன் காவலர் செய்த வேலை; வைரலாகும் விளாத்திகுளம் காவலரின் வீடியோ - Thoothukudi Police Viral Video

By

Published : Jul 26, 2023, 11:04 PM IST

தூத்துக்குடி: விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவர் இளம்பெண்ணுடன் தனிமையில் காட்டுக்குள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எடுத்த மர்ம நபருக்கும் அதிலுள்ள காவலருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராஜேந்திரன். கடந்த 2009-ம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் முதல் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், காவலர் இராஜேந்திரன், இளம்பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தபோது சிலர் வீடியோ எடுப்பதைக் கண்டு பயந்து ஓடும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் காவலர் இராஜேந்திரன், டி-சர்ட் - லுங்கி அணிந்து கொண்டும், அருகில் சுடிதார் அணிந்து துப்பட்டாவைக் கொண்டு முகத்தை மூடியபடி இளம்பெண் ஒருவரும் மர்ம நபர்கள் இவர்களை வீடியோ எடுப்பதைக்கண்டு பயந்து ஓடுவது போன்றும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மற்றும் காவல் துறை வட்டாரங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்தில் 3 உதவி ஆய்வாளர்கள், 1 ஆய்வாளர் என பலர் பாலியல் புகார், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு காவலரின் சர்ச்சை வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details